×

நக்கீரர் பாடல்களை பாடமாக்க வேண்டும் மதுரை ஆதீனம் பேச்சு

திருப்பரங்குன்றம், டிச. 13: நக்கீரர் பாடல்களை பாடமாக மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நக்கீரர் தமிழ்ச்சங்க மாநாடு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு சேவை புரிந்த ஆன்மீக செம்மல் சண்முகசுந்தரம் உள்ளிட்டோருக்கு நக்கீரர் தமிழ் விருது வழங்கினர் பின்னர் அவர் பேசியதாவது:

ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு வெளியேற்றி விட்டாலும் அவர்கள் விட்டு சென்ற ஆங்கில மொழி நம்மை விட்டு செல்லவில்லை. தமிழகத்தில் ஆங்கில வழி பள்ளிகள் தான் அதிகமாக உள்ளது. அம்மா என்று அழைக்காமல் தாயை குழந்தைகள் மம்மி என்று அழைக்கின்றனர். அழகான தமிழ் மொழியில் பேச வேண்டும் தமிழன் சாதாரணமாக இறந்தால் கூட கத்தியை கூட வைத்து புதைக்கும் வழக்கமுடையவர்கள். அவ்வளவு வீரமான தமிழர்கள் தற்போது ஆங்கிலத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். நக்கீரர் பாடல்களை தமிழக அரசு பாடமாக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் நக்கீரர் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Madurai Aadeenam ,Nakkirar ,
× RELATED மதுரை ஆதீனம் பேச்சு ‘கை லாஸ்’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் நித்யானந்தா